Jul 22, 2022

Birds of Singapore - Page 2

 














Jul 21, 2022

கோவையில் புத்தகத் திருவிழா...!!

கோவை புத்தகத் திருவிழாவில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கும்.

அரங்கு எண் : 224 (குட்டி ஆகாயம்)


#அன்னூர், #கிணத்துக்கடவு, #கோட்டூர், #சூளீஸ்வரன்பட்டி, #தொண்டாமுத்தூர், #வெள்ளலூர், #ஆலந்துறை, #ஆனைமலை, #செட்டிபாளையம், #சின்னவேடம்பட்டி, #தாளியூர், #எட்டிமடை, #சூலூர், #இடிகரை, #கண்ணம்பாளையம், #மூப்பேரிபாளையம், #உடையகுளம், #நரசிம்மநாயக்கன்பாளையம், #ஒத்தக்கல்மண்டபம், #பெரியநாயக்கன்பாளையம், #பெரிய நெகமம், #பூளுவப்பட்டி, #சர்க்கார் சாமக்குளம், #சமத்தூர், #சிறுமுகை, #சூளீஸ்வரன்பட்டி, #திருமலையம்பாளையம், #தென்கரை, #வேடப்பட்டி, #வெள்ளக்கிணர், #வேட்டைக்காரன்புதூர், #ஜமீன் ஊத்துக்குளி,பள்ளபாளையம், #பெரியநாயக்கன்பாளையம், #தொண்டாமுத்தூர், #சர்க்கார்சாமக்குளம், #சுல்தான் பேட்டை, #கிணத்துக்கடவு, #சூலூர், #அன்னூர், #மதுக்கரை, #காரமடை, #மேட்டுப்பாளையம், #வால்பாறை, #கருமத்தம்பட்டி, #காரமடை, #கூடலூர், #மதுக்கரை, #பொள்ளாச்சி - அனைத்து ஊர் மக்களுக்குமான திருவிழா...!!



Jul 15, 2022

அந்தரப்பூ : திரு.கல்யாண்ஜி

வண்ணதாசன் அவர்கள் எழுதிய அந்தரப்பூ வாசித்தேன். இந்த நூலின் தலைப்பே கவித்துவமானது. நூலின் தலைப்பு ஒரு கவிதையில் இருந்து உதிர்ந்துள்ளது.

மரத்தில் கிளையில்

மஞ்சரியில் பார்த்தாயிற்று

கீழ்த் தூரில். மண்ணில்

கிடப்பதையும் ஆயிற்று

வாய்க்கவேண்டும்

காம்பு கழன்றபின்

தரை இறங்குமுன்

காற்றில் நழுவி வருமோர்

அந்தரப்பூ காணல்



ஒரு மலர் தானாக உதிர்ந்து மண்ணை அடையும் முன்பாக அதை அவதானித்திருத்தல் என்பது சவாலான தவம். அப்படியொரு அபூர்வமான நிகழ்வைப் போலவே பல கவிதைகளின்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நல்லதொரு வாசிப்பனுவத்தை தருகிறது அந்தரப்பூ.