தேன் பருந்து [Oriental honey buzzard]

அகன்ற மலைப்பொடவில் 

அசையாதிருக்கும் தேன்கூட்டை 

அருகில் சென்றணைத்தபடி 

அடையிலூறும் குடம்பிகளை 

பிடித்துண்ணும் தேன் பருந்து,

பீலிகள் சிலிர்த்து நிற்க 

தழல் விழிகள் சுழல 

தேனீக்களை எதிர்கொண்டு 

வான் நோக்கி சிறகை விரிக்கும்.Post a Comment

0 Comments