ஆற்று ஆலா [River Tern]

மணலோடு மணலாக

ஆலா முட்டைகளையும்

அள்ளிச் செல்லும்

லாரியின் பின்னால் 

ஆலா பறக்கிறது.

ஆலா திரும்பிவருமென

காத்திருக்கிறது ஆறு.

முட்டைகள் திரும்பக்கிடைக்குமென

தேடுகிறது ஆலா.

மேலும் மணல் அள்ள

திரும்பிவருகின்றன லாரிகள்.

Photo by Balachandran

Post a Comment

2 Comments