நம்பினால் நம்புங்கள்

நீங்கள் ஒரு பொய் சொன்னீர்கள்.

நான் அதை மறுத்தேன்.

நீங்கள் மீண்டும் ஒரு பொய் சொன்னீர்கள்.

நான் அதை நம்ப மறுப்பது போல பாவனை செய்தேன். 

நீங்கள் மீண்டும் ஒரு பொய் சொன்னீர்கள்.

நான் மெளனமாக இருந்தேன்.

நீங்கள் மீண்டும் ஒரு பொய் சொன்னீர்கள்.

நான் நம்புவது போல பாவனை செய்தேன்.

நீங்கள் மீண்டும் ஒரு பொய் சொன்னீர்கள்.

நான் அதை நம்பினேன்.

இப்போது நீங்கள் நம்புங்கள். 

நீங்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை.
Post a Comment

0 Comments