Aug 27, 2019

அமேசான் குறித்து பேசுவோம்

என்னுடைய கேள்வி மிக எளிமையானது. இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது ஏன் அமேசான் காட்டுத்தீ குறித்து பேசுவதில்லை. வீடுகளுக்குள் ஏன் இது குறித்து ஒருவரும் கவலையோடு பேசுவதில்லை. அமேசான் காட்டிற்கும்  நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்புகிறோமோ? ஏன் அரசியல் தலைவர்கள் யாரும் இது குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தவில்லை ? உலகில் உயிர்கள் வாழ 20% ஆக்சிஜனை தரும் காடு எரிந்து கொண்டே இருக்கிறது. நாம் பேசுவதால் தீ அணைந்துவிடாது என்பதாலா அல்லது நமக்கு இனி ஆக்சிஜன் தேவையில்லையா?



பருவநிலை பிறழ்வு (Climate Change) ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் இங்கே இன்னும் விவாதமாகவில்லை. வெள்ளம் வரும் போதும், புயல் வரும் போதும், கடும் வறட்சியின் போதும் பேசும் ஊடகங்கள் அதன் காரணம் பருவ நிலை பிறழ்வு என்பதை அழுத்தமாக சொல்ல மறந்துவிடுகின்றன. பெரும்பாலும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ என்பது எதிர்கால தலைமுறையை மட்டுமல்லாது உலகில் வாழும் எல்லா உயிர்களையும் சிக்கலில் கொண்டு போய் நிறுத்தும். அதிகரித்து வரும் கார்பன் அளவை ஈடு செய்ய முடியாமல் திணறி வரும் பூமிக்கு, அமேசான் காட்டுத்தீ மிகப்பெரிய சவால். காட்டுத்தீயால் மேலும் அதிகரிக்கும் கார்பன் அளவை எப்படி ஈடு செய்யப்போகிறோம் ?



மௌனம் ஒரு வலியமான ஆயுதம். சில நேரங்களில் மௌனத்தை உடைப்பது அதை விடவும் பெரிய ஆயுதம். அமேசான் குறித்து பேசுவோம்.

Aug 26, 2019

யாருக்கானது பூமி? - ஒவ்வொரு புத்தகமும் மரமாக மாறும்

"யாருக்கானது பூமி?" நூலின் இரண்டாம் பதிப்பின் மூலம் நான் பெற வேண்டிய தொகையை முழுவதுமாக PHCC (Palni Hills Conservation Council) அமைப்பிற்கு நேரடியாக பதிப்பகத்தின் வாயிலாகவே கொடுக்கிறேன். இந்த பணம் பழனி மழைத் தொடரில் சோலை காடுகளை பாதுகாக்கவும் வளப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

எனவே நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகமும் மரமாக மாறும்.




புத்தகத்தை இணையத்தில் வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தலாம்.

Amazon Kindle 

https://www.amazon.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-Yaarukaanathu-Boomi-Tamil-ebook/dp/B084HM2LGT/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF&qid=1588311926&sr=8-1

http://crownest.in/crownest.in-yaarukaanathu-boomi

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த புத்தகத்தை பரிசளிப்பதன் மூலம், சோலை காடுகளை காக்க உதவுங்கள்.